கார்த்திகை ஒளி தீபம்

தினம் நீ பார்க்கும் பார்வையில்தான்
என் காதல் வாழுமடி !

தினம் நீ பேசும் பேச்சில்தான்
என் ஆயுள் கூடுமடி!

உனக்காக நான் நெய்த
வானவில் உடையை
ஆசையாய் அணிந்து வந்து
என்னை அபகறிப்பதேனடி!
என்னை நீ கவிஞனாய்
மாற்றியது போதுமடி!

கார்த்திகை ஒளி தீபமே
மார்கழிப்பனி உனைத் தேடுமே
தைப்பிறந்தால்
விளைந்து வளைந்து நிற்கும்
செங்கதிரினை
அறுவடை செய்திட வேண்டுமே
உன்னோடு கலந்து உறவாட வேண்டுமே
நீ வேண்டுமே எனக்கு நீ துணையாக
உனக்கு நான் இணையாக!

எழுதியவர் : கிச்சாபாரதி (15-Jun-16, 8:59 pm)
பார்வை : 127

மேலே