மண்டையோட்டின் ரகசியம்

மரணத்தின் மூடி கவிழ்ந்து
உள் தள்ளும்
அணுக்க உயிர்களின்
இன்றியமையாதிருக்கும் ஒன்று
கவிதைகளின் புணர்வெளிகளில்
சிதறுண்டு கிடக்கும்
அந்த மண்டையோட்டுகளின்
எக்காள இளிப்பின் ரகசியங்கள்
உடைந்தெழும் தருணம்
விம்மல் பீடிக்கும் மனம்
நாடிச்சென்று
உயிர்களின் எஞ்சியிருக்கும்
படிமங்களிடம்
தங்களின் ரகசியங்களையும்
பகிர்ந்து கொள்வதில்
மர்மம்
ஏதுமில்லைதானே?