என் மகனுக்கு வாழ்த்து

எனதருமை மகனே !
நாளை உன் பிறந்த நாள்.
என்றும் மேன்மை பெற வாழ்த்துக்கள்.

நித்தம் ஒரு புத்தம் புது உலகம் செய்.
உன் சூரியன் இரவிலும் உதிக்கட்டும்.
உன் வானம் இன்னும் உயரமாய் இருக்கட்டும்.
அதில் உன் நிலவு கறையின்றி ஒளிரட்டும்.
உந்தன் எண்ண வயல்களில்
சிந்தனைகளை பயிர் செய்து
சாதனைகளை அறுவடை பண்ணிக் கொள்.
மனிதநேய மரங்கள் வளரட்டும்
கருணையென தென்றல் வீசட்டும்.

உன் நேற்றுகளை சேமிப்பில் வைத்திரு.
உன் இன்றுகளில் இனிப்பை சேர்த்திடு.
உன் நாளைகளை நம்பிக்கையால் நெய்திடு.

வளமான வாழ்வை வாழ்ந்திடு.

உன் அப்பா
மாமுகி.

எழுதியவர் : முத்து கிருஷ்ணன் கண்ணன் (16-Jun-16, 2:02 pm)
பார்வை : 188

மேலே