கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
தெளிவில்லா
கரணங்களை
தீட்டிக் கொள்ளும்
மொன்னைக்கத்தி
கிழித்து
சிறுதுளி உயிரணு!
உவகை மேலிடும்
நிச்சயமானது
சூழ்ந்து கொண்ட
நொடி
வெறுமை!
சிதறும்
ஒளிக்குவியல்
கட்டவிழ்த்த
காலமின்மையெனும்
உடைந்த
குவியாடி!
தன்னிரக்கம்
மீட்டி
தந்தியறுக்கும்
அபஸ்வரம்!
எல்லையின்மையில்
முட்டி
திகைக்கும்
அழியாப் புகழ்!
இருந்தும்
பூமி
தொங்குவதோ
வானத்துக்கும்
வானத்துக்குமான
பயண
இடைவெளியில்!