இரட்டை குழந்தைகள்

ஒரு தாய் வயிற்று
பிள்ளைகளாய்
ஊருக்கே உறவாகிப்போன
இரட்டைக் குழந்தைகள்

ஒரு பிள்ளை
கை கொடுத்து உதவும்
மறு பிள்ளையோ
காலை வாரிவிடும்

பகைமை கொண்ட
பங்காளிகள் போல்
பிள்ளைகள் இருவரும்
ஒரே வீட்டில் வாழ்வதரிது

கை கொடுத்தாலும்
காலை வாரினாலும்
இரண்டுமே ஒருவரிடம்
நிலைத்து நிற்பதில்லை

எதிர் எதிரா இருந்தாலும்
எல்லோர் வாழ்விலும்
வந்து வந்து போகும்
இன்பமும் துன்பமும் தானது.

எழுதியவர் : கோ.கணபதி (17-Jun-16, 9:27 am)
பார்வை : 1036

மேலே