அவள்
![](https://eluthu.com/images/loading.gif)
குருதி சொட்ட
நாசியடைத்து
தொய்ந்த கால்களுடன்
மண்டியிட்டு
அலைக்கழியும் காலத்தில்
கல்லெறியும் சனங்களின் மத்தியில்
அவள் ஏங்கிக் கொண்டிருந்தது எதை?
மாமிசம் விழுங்க காத்திருக்கும் பிதாவையா?
ஆம்! நீ விழுந்து மண்ணுக்கு உப்பாவாய்!
அறுதியிடப்படா சொர்க்க ராஜ்ஜியம் உனக்கானதாகும்.
கப்பிக்கொண்டு என் ஆன்மா மட்டும்
இந்த நாளையின் ஒவ்வொரு துகளிலும்
நீ உயிராய் எல்லையில்லா வாஞ்சையுடன்
ஆம் எனக்கானதாய் நீ விட்டு செல்வது எதை?
உன் வார்த்தைகளை அல்ல!
நெஞ்சுள் தைக்க
என்னில் தழுவுக்கொண்ட
நின் ஸ்பரிசங்களன்றி!