எங்க அப்பா போல வருமா

பொட்ட புள்ளையா பொறந்துபோச்சே - னு ஊருல இருக்குற பெரிய மனிசிங்க எல்லாம்
எங்க அப்பா, அம்மா மனச கஷ்டபடுத்தி விட்டு போக .. எங்க அப்பா மட்டும் தா ஊருலையே
எனக்கு லட்சுமி பொறந்திருக்குனு சந்தோசாம எலாருக்கும் சொல்லி கெடா வெட்டி பொங்க சோறு போட்டாரு..

அம்மாக்கு கூட பையனா பொறந்துதிருக்கலாம்னு கவலை.. அப்பாதா அடி போடி இவளே எ மக போல இந்த ஊருல யார் இருகாங்க சொல்லி அம்மா மனச தேத்தி என்ன பக்குவமா நல்லது கெட்டது சொல்லி வளத்துனாரு

அம்மா எனக்கு நகைய சேர்த்த.. எங்க அப்பா எனக்கு படிப்ப சேர்த்து கொடுத்தாரு.. யாராவது வீட்டுக்கு வந்தா வணக்கம் சொல்ல அம்மா கத்து கொடுத்தாங்க.. கேட்குற கேள்விக்கு வெட்டு வெடுக்குனு பதில் சொல்ல எங்க அப்பதான் கத்துகொடுதாரு...

வேண்டாங்க.. இப்படி புள்ள பேசுக்கு பேச்சு பதில் பேசுனா நாளைக்கு நம்ம புள்ளைக்கு வாயாடி, ரொம்ப திமிர் புடிச்சவன்னு பேச்சுவந்துபுடும் -ன்னு அம்மா பயந்தப்போ.. எங்க அப்பா தான்.... ஏவ எப்புடி பேசுனா என்னடி.. இந்த ஊர பத்தி எனக்கு தெரியாது பரு.. நொட்ட சொல்லி நொட்ட சொல்லியே காலுக்கு அடியில போட்டு நம்மள மிதிச்சே கொன்னுபுடுவாணுக.. எம்பொண்ண அப்படி போக நான் விடமாட்டேன் .. நா இருகரவர உங்கள அடுத்தவங்க கிட்ட போய் நிக்க விடமாட்டேன்னு அடிச்சு பேசுன முதல் வீரன் எங்காப்பா...

புள்ள படிச்சது போதும்... இப்படியே படிகவச்சா கல்யாணத்த எப்போ பன்னறதாம்னு சொன்ன எங்க
பட்டிய வாயடைச்சு... படிக்கற புள்ளடி.. நாளைக்கு யார்கையையும் எதிர்பாக்காம சொந்தகால்ல
என்புள்ள நிக்கனும்டி.. அவ படிச்சு நாலு பேருக்கு அவ கையால நல்லது பன்னனுமடி-ன்னு சொல்லி
அம்மாவை சம்மதிக்க வச்சு வெளியூர்ல போய் என்ன படிக்க வச்சவரு எங்கப்பா...

இப்போ சொல்லுக... எங்க அப்பா போல யாரு வருவா..
எனக்கு குல சாமி எங்கப்பா...
எனக்கு அம்மாவும் எங்கப்பாதான்..
இப்போ நா - கைநெரச்சு சம்பளம் வாங்க காரணம் எங்கப்பா ..
கச்சிதமா எனக்கேத்த மாப்ளைய பாத்து பாத்து கடிட்வசவரு எங்கப்பா.....

இப்போ சொல்லுக... எங்க அப்பா போல யாரு வருவா..

@@ அணைத்து தந்தைகளுக்கும் எனது மனமார்ந்த தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் - தாயை போலவே ஒரு பெண்ணிற்கு தந்தையும் இன்றியமையாத புனிதம் - அது முன்ஜென்ம பந்தம் @@

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (19-Jun-16, 12:10 pm)
சேர்த்தது : கிருத்திகா
பார்வை : 670

மேலே