தமிழே உயிரே

உலகம் முழுக்க மொழி இருந்தாலும்
என் தாய்மொழி
தமிழ் தான் முதல்மொழி

இதை யார் ஏற்றாலும்
ஏற்கவில்லை என்றாலும்
எனக்கு கவலை இல்லை
என் எண்ணம் சரியானதே

ஏன்
உலகத்தில் உள்ள
எல்லோருக்குமே தெரியும்
தமிழ் மொழி தான்
முதல் மொழி என்று
ஆனால்
யாரும் முன் நிறுத்தமாட்டார்கள்

அரசியல் என்று வரும் பட்சத்தில் மட்டும் தமிழ் தமிழ் என்று உரை நிகழ்த்துவார்கள்

இன்றைய இளைஞனோ
தமிழ் தமிழ் என்று
உலக நடப்புக்காக பேசுகிறானா தெரியவில்லை.

அவன் பதிவு செய்யும் வரிகளே
தவறாய் இருக்கும் பட்சத்தில்
பிறருக்கு எப்படி
உபதேசம் செய்ய முடியும்.

முதலில் தமிழை படி
பின் எழுது

என் மனதில் உள்ள நல்ல எண்ணத்தை சொல்ல
எனக்கு தெரிந்த வார்த்தையில் சொல்கிறேன்
இதில் என்ன தவறு இருக்கிறது.
விட்டால் நீங்கள் இலக்கணம் இலக்கியம் எல்லாம் படிக்க சொல்வீர் போல் உள்ளதே?

என்று கேட்கிறீர்களா?

மனதில் உள்ளதை சொல்ல மொழி தேவையில்லை.
ஆனால் நீங்கள் பதியும் வார்த்தைகளை பார்த்து
இது தான் இந்த வார்த்தைக்கான எழுத்து என்று ஒரு சிலர் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது
ஆதலால் தான் கூறுகிறேன்
தமிழ் வார்த்தைகளை படியுங்கள்

எந்த தாயும்
தன் பிள்ளையின்
தவறை பொறுத்துக்கொள்வாள்.
ஊராரும் அப்படியே இருப்பார்களா

ஆதலால் தமிழை நுகருங்கள்
தெரிந்த தமிழில் தெளிவாக தைரியமாக பேசுங்கள்

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (20-Jun-16, 9:06 am)
Tanglish : thamizhe uyire
பார்வை : 676

மேலே