பொன்னூஞ்சலில் தமிழ் மகள்

வளரும் இளைஞர்களே!
எதிர்கால மன்னர்களே!
எம்மொழியும் பயிலுங்கள்!
தாய்மொழியாம் தமிழையும்
செம்மையாய் பயிலுங்கள்!
பயின்று......?

தோழமைக் கடிதங்களை
தாய்மொழியாம் தமிழினிலே
இலக்கிய நயம் சேர்த்து
மின்னஞ்சல் மூலம்
எழுதி மகிழுங்கள்!
தமிழை வளர்த்திடுங்கள்!
மின்னஞ்சல் போக்குவரத்தில் -- தமிழ் மகள்
மின்னூஞ்சல் ஆடட்டும்!
பொன் ஊஞ்சல் உணரட்டும்!

படிப்புக்கும் வேலைக்கும்
வெளிநாடு செல்வீர்!
மறந்து விடாதீர் ஒன்றை!
குழந்தைப் பருவம் முதல்
வாழ் தமிழர் அங்கும் உண்டு!
தமிழ் மகளின் பேரழகை
அவர்க்கு எடுத்துரைத்து
நேரம் கிடைக்கும்போதெல்லாம்
தமிழ் கற்க உதவுங்கள்!
படைப்புகள் பல கொடுத்து
படித்திட ஊக்குங்கள்!

"நீங்களும்தமிழுக்கு
அழகூட்டும் படைப்பாளி"
என்று தெம்பூட்டி
நூல் பல படைக்க வைத்து,
அவர்தம் நல் படைப்பும்
நம் நாட்டுக் கனுப்புங்கள்!
அந்நாட்டு தமிழரும்
நம் நாட்டு தமிழரும்
மின்னஞ்சலில் தமிழ்மகளை
மின்னூஞ்சல் ஆட வைப்போம்!
பொன்னூஞ்சல் தமிழ் மகளின்
வளர்ச்சியில் பெருமை கொள்வோம்!

எழுதியவர் : ம கைலாஸ் (19-Jun-16, 11:22 pm)
பார்வை : 121

மேலே