கவிநிலவும் இரவும்

கவிநிலவும் இரவும்

நிலவும் இரவானதே இங்கே சில
நிலை பெற்ற மாந்தர் மனத்தால்

நிற்றலும் கனவு ஆகிபோனதே
நீள் பகலும் இரவாகிபோனதே இங்கு

நிலையும் இரவாகி போனதே
நிலவும் கனவாகி போனதே

நில்லாத நிலவும் இன்று இப்போது
நிலையறு நிலையில் நின்று போனதே

நிலாவும் எங்களை நினைப்பதை மறந்து எங்கள்
நிலை மறந்து வீணில் நின்று போனதே

நிலவே நிலவே நீயும் நீயும் உன்
நிறம் கொண்ட குணம் மறந்தது ஏனோ ?

நில்லா மனிதர் பலர் போலே எம்மிடமும்
நில்லாது போனாயே மனமின்றி குணமின்றி

நிலைத்தாய் உன் நிலையில் நிலைத்தாய் நீ
நிலைத்தது நிலைத்தது ஒ நீ இறந்த பின் தானோ ?

நிலை இல் நிலையில் உன் இன் நிலை நான் உன்
நன்றி மறந்தேனோ ? நன்றி மறந்தேனோ ?

நிலவே நீயும் என்னை போலவே இறந்தாயோ ?
நிலவே நீயும் என்னை போலவே இறந்தாயோ ?

எழுதியவர் : மா வெங்கடேசன் (14-Jul-10, 5:31 am)
சேர்த்தது : m venkatesan
பார்வை : 455

மேலே