என் கண்களில் கனலாக

முடியாதது எதுவோ
அதைச் செய்து விட முடியும்,
சாதிக்க முடியும் என மனதில்
நான் நம்புகிறேன்,
என் கண்களில் கனல்!

கடினமான சவால்களையும்
வெல்ல முடியும் என்னால் ஏனெனில்
வெல்ல வேண்டும் என்ற வெறி
என் கண்களில் கனலாக
எரிந்து கொண்டிருக்கிறது!

கிட்டாதென எதுவுமில்லை எனக்கு
கிடைக்குமென நம்புகிறேன் – ஏனெனில்
முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை,
என் கண்களில் கனலாக
எரிந்து கொண்டிருக்கிறது!

என் நெஞ்சினில் சாதிக்க வேண்டும்
என்ற ஊக்கம் நிறைய இருக்கிறது,
வெற்றி வெகு தூரமில்லை, சாதிக்கத் துடிக்கும்
என் கண்களில் கனலாக
எரிந்து கொண்டிருக்கிறது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-16, 3:01 pm)
பார்வை : 101

மேலே