ஊடல் -5

பச்சை மிளகாயை தெரிந்தே
விரும்பிக்கடிக்கிறேன் - ஹா ஸ்ஸ்ஸ் காரம்
என்றவுடன் தழும்ப தழும்ப நீ தண்ணீர் கொண்டு வருவாய்
என்பதற்காக மட்டுமல்ல!!!!!!!!
பதறி என் உச்சந்தலை தட்டி .. என்னங்க கொஞ்சம் பார்த்து
சாப்பிடக்கூடாதா, என நான் பருக
என் உதட்டருகில் நீ நீர் கொண்டுவரும்போது....-
ஏனோ என்னை அறியாமல் ஒருதுளி கண்ணீர் துளிர்க்கிறது - என் தாயின் நினைவாக

இதுக்குதான் , நான் மிளகாயே போடறதில்லே -இப்போ பாருங்க
உங்க கண்ணுல எப்படி தண்ணிவருதுன்னு -என்று அப்பாவியாய்
நீ சொல்ல சிரிப்புவந்துவிடும் எனக்கு - செல்லமே என் அழகிய அம்மாவடி நீ

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (22-Jun-16, 12:45 pm)
பார்வை : 493

மேலே