அழகு ரோஜா சரோஜா

ரோஜாத் தோட்டத்தில்
அருகருகில் நீயும் நானும்
அமர்ந்திருக்க உன்னைச்
சுற்றிலும் ரோஜா மலர்கள்!

உன்னையும் பார்க்கிறேன்,
ரோஜாக்களையும் பார்க்கிறேன்,
மாறி மாறிப் பார்க்கிறேன்,
யார் அழகு எது அழகு!

ரோஜாக்களைப் பழிக்கும்
என் சரோஜாவைப் படைத்து
என்னிடம் அன்பு கொள்ள வைத்த
இறைவா! உனக்கு நன்றி!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jun-16, 2:59 pm)
பார்வை : 85

மேலே