நினைவதான் மிச்சமோ
என்னை நேசித்தாள்..
காதல் செய்ய..
ஏனோ யோசித்தாள்..
கல்யாணம் செய்ய..
நித்தம் பேசியே
காதல் செய்யதிட்டாள்...
சித்தம் கலங்கியே
திரிகிறேன் இப்போ..
பாவை அவள் எந்தன்
பாதையில் ..
திசை மாறியே
பறந்து போனாள்
பாதியில்..
நானோ இங்கு
நடு வீதியில் ...
என்னை சொல்லி குற்றமில்லை...
என்னவளை சொல்லியும் குற்றமில்லை..
காலம் செய்யத கோலம் ..
மலர் என்றேன் அவளை
என் மண்ணில் மலரவில்லை
பூக்கட்டும் சந்தோச பூக்கள்
அவள் வாழ்வு எனும் தோட்டத்தில்..
நிலவு என்றேன் அவளை
என் இரவில் வரவில்லை
ஒளிரட்டும் அவள் வானம்
என்றும் மின்னட்டும் ...
நதி என்றேன் அவளை
என் தாகம் தீர்க்கவில்லை
பாயட்டும் இனப வெள்ளம்
அவள் காலம் முழுதும்...
தென்றல் என்றேன் அவளை
என் பக்கம் வீசவில்லை
வசந்தம் வரட்டும் அவள்
வழியில்..
மின்னல் என்றேன்
என்னுள் எழவில்லை..
மழை என்றேன்
என்னை நனைக்கவில்லை..
எல்லாம் கிடைக்கட்டும்
என்றும் அவள் வாழ்வு
சிறக்கட்டும்...
பழகிய காலம்
செல்லம் கோவம்
கொண்டாள்
செல்வன் நான் வசவ
வேண்டும் என்று ...
பிரிந்து விட்டாள்
எங்கோ
மறைந்துவிட்டால்
என்னை
தவிக்கவிட்டு...
வசைபாடவே தொடங்கினேன்
இக்கவிதை ..
வரவில்லை வார்த்தை
இன்னும் நேசிப்பதால்
அவளை...
பார்த்ததும் பாவமோ..
பழகியதும் சாபமோ..
காதல் பண்ணதும் குற்றமோ..
அவள் நினைவதான் மிச்சமோ ..