என் காதல் தலைவியின் ரசனை
இன்று மஹதியின் குரலிசை!
மேடையில் பாடகி
சுருதி சுத்தமாகப் பாடுகிறார்!
என் எதிரில்
இமை இரண்டும்
மெல்லிய அதிர்வுடன்..!
இரு கண்களையும் மூடி
இனிய என் காதல் தலைவி
ரசித்துக் கொண்டு இருக்கிறாள்!
வலது கை
துடையில் பாட்டுக்கேற்ப
தாளமிடுகிறது!
பாட்டின்
ஏற்ற இறக்கங்களுக்கு தலை
மேலும் கீழுமாக அசைந்தாடுகிறது!
கூந்தலில்
மல்லிகைச்சரம் தலை அசைவிற்கேற்ப
முத்தமிட்டு மயங்கிச் சரிகிறது!
காதிலே
தொங்கட்டான் குதூகலமாய்
நாட்டியமாடுகிறது!
கால்கள்
தரையில் முத்தமிட்டு
தப்பாமல் தாளமிடுகிறது!
அவள்
ஒரு ஏழு சுரங்களடங்கிய
இசை ரசிகை!