ஸ்வர்ணமே
ஸ்வர்ணமே
உன் குரல் என்ன
புல்லாங்குழலா
பேசயில் தேன் சிந்துதே
உன் விரலில் என்ன
மின்சாரம் வைத்திருக்கிறாயா
தொட்டவுடன்
உடலில் ஜிவ்வென்று பாய்கிறதே
நேரங்கள் நகராமல்
உன்னிடத்தில் தூக்கி எறியுமோ
புயலில் சிக்கிய பூவாய்
பறப்பேனோ
உன் விரல்கள்
எனை அணைத்திடுமோ
இல்லை என் விரல்கள்
உனை மீட்டிடுமோ
வானிலை மாறுதோ
பனிமழை பொழியுதோ
வசந்தகாலம் வந்ததோ
புது வெள்ளம் பாயுதோ
உனக்குள்ளே
எனை போல்
~ பிரபாவதி வீரமுத்து

