காதல் மயக்கம்

செஞ்சாந்து பொட்டு இட்டு
மருதாணி கோலமிட்டு
மெட்டு கட்டி வந்தாலய்யா
பட்டிக்காட்டு பெண்ணொருத்தி ,,,,!

பார்த்த கண்ணு மூடலியே
பருவம் இன்னும் தீரலியே
செதுக்கி வச்ச சிலையாட்டம்
எதிரில் வந்து நின்றாளே,,,,,

என் பார்வை தீண்டலிலே
கண்ணிமை ரெண்டும் படபடக்க
கருவண்டு கலராட்டம்
மருண்டு நோக்குதய்யா ,,,,

மங்கையவள் கன்னமும் தான்
நாணத்தில் சிவக்குதய்யா ,,,,!

காத்திருந்த பேருந்தும்
வேகமிட்டு வந்ததடா
கனியமுதை கண்டவுடன்
கிரீச்சிட்டு நின்றதடா ,,,,,,,

உலக மகா அழகிகளும்
எரிச்சல் கொண்டு பார்க்கையிலே
ஆட்டம் கண்ட ஆண் மனமோ
ரெக்கை கட்டி பறக்குதடா ,,,,,

கரம் பட்ட காசுதனை
வாங்கி கொடுக்க
கட்டணமின்றி செல்லென்று
உத்தரவு பிறக்க

சடுதியில் பூத்த
புன்னகையில்
பூலோக சொர்க்கமும் தான்
கண்ணெதிரே தோன்றுதடா

கண நேர பொழுதில்
தேவதை அவளும்
இறங்கி மறைய

இறக்கி விட்ட
பேருந்தும்
கண்ணீர் விட்டே செல்லுதடா ,,,,!

எழுதியவர் : தங்கதுரை (23-Jun-16, 4:24 pm)
பார்வை : 766

மேலே