ரமழான் கவிதைகள் பக்கம் 02--முஹம்மத் ஸர்பான்

தூய்மையான உள்ளத்தை கேட்கிறது.
நன்மையான உலகை படைக்க எண்ணுகிறது.
நரகத்தின் பலியாடுகளை சுவர்கத்தின்
விருந்தாளியாக்க ரமழான் அழைப்புக் கடிதம் எழுதுகிறது..,

அல்லும் பகலும் இறைவனை திக்ர் செய்து
ஐவேளையும் கூட்டாக தொழுகையை நிறைவேற்றி
உயிரின் சுவாசமாய் அண்ணளார் பெயரை வாசித்து
குர்ஆனின் பக்கங்களை பொருளோடு ஓதியுணர்ந்து
மனிதனின் செயலில் நன்மையை சுமக்கிறது ரமழான்

வைகறை வெளுக்கும் முன் ஸஹர் செய்து
பொழுதின் உதயத்தில் கூட்டாக நோன்பை துறந்து
இரவு வணக்கங்களை சுகமான நின்றி வணங்கி
நிலையான வாழ்க்கையை சிந்திக்க வைக்கிறது ரமழான்

வானில் எண்ணமுடியாத நட்சத்திரங்கள் போலவும்
மண்ணில் பரந்து விரிந்து கிடக்கும் ஆழ்கடல் போலவும்
மரணம் வந்தும் ஓய்வெடுக்காத தென்றல் போலவும்
நன்மையை நேசிக்கும் நெஞ்சம் வெற்றி பெரும் ரமழானில்

கைதிக் கூண்டில் நிற்கின்ற மனிதனையும்
நீதிபதியாக்கி அழகு பார்க்கிறது ரமழான்...,

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (24-Jun-16, 5:38 am)
பார்வை : 444

மேலே