காலமும் தான் மாறிடுமோ

காலமும்தான் மாறிடுமோ

காற்றின் மைந்தன் கணையாழியுடன் வந்து
கடந்த கால கதையினை கனிவோடு பகிர்த்திட
கணநேரத்தில் கண்ணீரும் மறைந்திட
கமலமென கண்கள் மலர்ந்திட
காத்திருக்கும் செய்தியினை நீ உரைத்து
கடல்கடந்து துயர் நீக்க வரவேண்டி
வழிமீது விழி வைத்து காத்திருப்பேன்
வரவில்லையெனில்
காலத்தின் கைகளிலே கலந்திடுவேன்
காயம் இது ஓயும் முன்னே கண்ணாளனை
கண்ணீரை துடைக்க தான் கொணர்திடுவாய்
என்றுரைத்தாள் மிதிலையின் செல்வியுமே

எழுதியவர் : கே என் ராம் (24-Jun-16, 3:38 am)
பார்வை : 57

மேலே