கவிஞர் கண்ணதாசன் பிறந்ததினம் ஜூன் 24 1927 --------கண்ணதாசன் பற்றி வாலி சொல்லக் கேட்கணும்…

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.



ம்ஜிஆரின் அரசவைக் கவியரசு கண்ணதாசன் மட்டுமல்ல, வாலியும்தான்!
கவியரசரைப் பற்றி வாலி அளவுக்கு உயர்வாக யாரும் எழுதி – பேசிக் கேட்டிருக்க முடியாது. “கண்ணதாசனுக்கு நான் தாசன்.. அவருக்கு நான் கூடப் பிறக்காத தம்பியாகத்தான் இன்னிக்கு வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னைத் தன் இளவல் என்று சொன்ன மாபெரும் கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசன் சொன்ன அறிவுரைகளை இன்னைக்கும் நான் கடைப்பிடிக்கிறேன். சொந்தப் படம் எடுக்காதேன்னார்.. நான் அதைச் செய்யவே இல்ல,” என்றார்.

ஒரு கட்டத்தில் வறுமை மிஞ்சி தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் மேலோங்கியபோது, அவரை மீண்டும் வாழச் செய்தது கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா பாட்டுத்தான்.

கண்ணதாசனின் நடையை நீங்கள் பின்பற்றி எழுதியதாகக் கூறப்பட்டபோது எப்படி உணர்ந்தீர்கள் என்று கேட்டதற்கு, “அதுல என்னய்யா தப்பு… என்னை தங்கத்தோடுதானே ஒப்பிடுகிறார்கள்… தகரத்தோடு இல்லையே.. நான் கேட்டது, படிச்சதெல்லாம் கண்ணதாசனைத்தானே. அந்த பாதிப்பு இருக்கத்தானே செய்யும். கண்ணதாசனைப் போலவே நான் எழுதுகிறேன் என்ற ஒப்பீடு எனக்கு சிறுமை அல்ல… பெருமை,” என்றார்.

எழுதியவர் : (24-Jun-16, 3:05 am)
பார்வை : 60

மேலே