தேனாடையில்•••

தேனாடையில் கொஞ்சம் இடம்கூட இல்லாமல் தவிக்கின்ற தேனீக் களைப்போல் இந்த பரபஞ்சத்தை படைத் துள்ளீரே என்ன நினைத்து படைத்தீர்கள்•••பிரபு••••?
மானிடக்கூட்டம் மலிந்து விட்டதை சுட்டிக் காட்டுகிறீர்••••இல்லையா•••காலா•••?
ஆம்••• பரபு••••!
அவர்களை குறைக்க அந்த வேலையை உம்மிடம் ஒப்படைத்தோமே••• அதற்கு நீர் என்ன செய்து இருக்கின்றீர் காலரே•••?
காலன் திரு திருவென முழிக்க•••!
திரு திருவென முழிக்காதீர் பதில் கூறும் நான்••• கூறட்டுமா•••?, உலகம் உருவான காலத்திலிருந்து இன்று நாள்வரை என்னை ஒருவனை மட்டும் தானே நியமித்துள்ளீர்கள்••••
ஆமாம் பிரபு பூமியில் பாருங்கள் ஒருதலைவன் இருக்கிறான் அவனுக்கு எட்டு பத்து தாதாக்கள் அவர்களுக்கீழே இருவது முப்பது அடியாட்களை வைத்துக்கொண்டுஆகாதவரைப் போட்டுத் தள்ளு கிறார்கள் இங்கே நான் ஒருவனே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன்•••!
அதனாலே•••!
எனக்கும் அதேபோல் அமைத்து•••!
அடே•• காலா••• உன்னிடம் கொடுத்த பணியை அவர்கையில் கொடுத்துவிட்டு நீ ஓய்வு எடுத்துக்கொள்கிறாய் அப்படித்தானே••••?
ஐய்யோ••• அப்படியில்லை •••பிரபு•••!
ஆமாம் நாம் இருவர் மட்டும் பேசிக்கொண்டிருக்கையில் உமது மனைவியை ஏன் வீணாக இங்கே வம்புக்கு இழுக்கிறீர்•••?
அவளை ஏன் நான் வம்புக்கு இழுக்கிறேன்••?
இப்போது தானையா அய்யோ என்று கூவினீர்•••!
ஆபத்திலும், நேரும் விபத்திலும் சிக்கிக்கொள்வோர்எப்போது பார்த்தாலும் என்னை அழைப்பதற்கு பதிலாக என் மனையாளைத்தான் எல்லோரும் கூவி அழைக்கிறார்கள் இதற்காக அவளும் கடுமையாக என்மேல் கோபித்துக் கொள்கிறாள் பிரபு••!
ஏன்••• எதற்கு••••?
கணவா•••• காலா•••• நான் உமக்கு மனைவியா இல்லை உலகத்துக் கெல்லாம் மனைவியா
என்று கேட்கிறாள்•• பிரபு••••!
உன் கணவன் எமன் நானிருக்க என்னைக் கேட்காமல் வேறு எவன் கூப்பிட்டாலும் ஓடிவிடுவதா என்று மழுப்பிப் பாரத்தாலும் அவள் கோபம் தணியவில்லை பிரபு
காலா சல்லி வேர்கள் ஒன்றுகூடி ஆணி வேரை அறுத்துவிட முடியாது
அப்படியே ஆனாலும் பிறகு சல்லி வேர்களின் கதி என்னாகும்
செத்துப்போகும்•••!
அது தெறிந்துமா தாதாக்களை திரட்டி உயிரை எடுக்கும் உம் பணியை அவர்கள் கையில் ஒப்படைத்துவிட்டு ஆட்டம் போடுகிறாய்
அய்யோ பிரபு•••!
அடே••• காலா••• மறுபடியும் உன் மனைவியை ஏன் இங்கே அழைக்கிறாய் நீ அவள் பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே சட்டென்று ஓடி வந்து உன் எதிரில் நிற்கிறாளே••!
பிரபு போதும் போதும் இனி மறந்தும் கூட அவள் பெயரைஉச்சரிக்க
மாட்டேன்•••பிரபு••!
சரி போ உலகில் இருக்கும் தாதாக்களை சிறை பிடித்து அவர்களால் கொல்லப்பட்ட அவர்கள் உயிரை அவர்களிடமே கொண்டுபோய் சேர்த்துவிட்டு பிறகு வா
பிரபு அதுதான் முடியாது
முடியாதவனுக்கெல்லாம் இந்த பதவி சரிபட்டு வராது
நீ ஓய்வு எடுத்துக்கொள்