மும்மாரி•••

மழையே மழையே
நீ வரவேண்டும்!

ஒரு பழுதின்றி உழுதுண்டு வாழ்வார் உழவர் மனதில் மகிழ்வை நீ தரவேண்டும் !

ஆலங்கட்டி மழை பெய்து ஆண்டுகள் பல ஓடிவிட்டது

வெள்ளப்பெருக்கெடுக்க
பன ஓலையிலே சம்புகட்டி
தலையிலிட்டு,மேளங்கட்டி அடித்து ஆர்பரித்து குடியை மேடுதேடி ஓடிப்போகச் சொன்ன காலம் எங்கே?

காலங்கள் தாழ்த்தாது மும்மாரி பெய்திட உழவர் முகசிரிப்பு எங்கே போனது
இயற்கையின் மாற்றமா அல்லது நகரங்களை
சிங்காரிக்கும் தோற்றமா

இங்கே பாலங்கட்டி, பசுமையை ஓரங்கட்டி,
சாரங்கட்டி, மாட மாளிகை கட்டி, கூடகோபுரங்கட்டி,
முக்கியத்துவம் கொடுத்து விட்டதனால் தானோ வென சிந்திக்கச் செய்குதுவே--

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி/ மும (26-Jun-16, 8:44 am)
பார்வை : 90

மேலே