இருளில் தனிமை
வலியா இல்லை சுகமா!
விழித்திரை மூடித் திறக்கும் பொழுது கண்களின் மனநிலை என்னவோ!
இப்படி பதில் தெரியாமல் இருந்த என் உள்ளத்திற்கு இருளில் சற்று வெளிச்சம் கிடைத்தது போல் மனதின் ஒரமாய் புலப்பட்டது " தனிமை சுகமே".!!
இரவில் விளக்கு வெளிச்சம் தரும் என்பது சராசரி மூளைக்கு தெரிந்த விஷயம்,.. வெளிச்சம் என்பது இருளை தாங்கி நிற்க்கிறது என்பது மனதின் ஆழ்நிலை...
இருள் என்பது பயம் என சித்தரிக்கப்பட்டு விட்டது..!!
மனதோ வேறு வழியின்றி அதை உண்மை என ஏற்றுக்கொண்டது...!!
வயது முதிர்ந்தாலும் மனம் என்பது குழந்தை அல்லவா...!!
பழகித் தெரிந்து கொள்ளும் குணமோ மனதிற்கு..?
தனிமையில் இருள் என்பது அரவணைப்பு...!!
உருவமின்றி மனதிற்கு ஆறுதல் சொல்லும் தோழி...!!
இருளுக்கு நீ யார் என்பது தேவையில்லை..
அதனால் தானோ என்னவோ நிழலை கூட அது கண்டு கொள்வது இல்லை..!!
ஏன் இருள் பெண்பால்..?"தோழி" என்று தோன்றுகிறதா...
யார் என்ன என்பதை விடுத்து அரவணைப்பை மட்டும் வெளிக்காட்டியதால் நிச்சயம் அது பெண்பாலே...!!
தனிமையில் நிச்சயமாய் அனைவரும் கடந்து வரும் தருணம்...
உயிரற்ற அனைத்தும் உனக்குத் துணையாய் நிற்க்கும்.. அசையாமல் உனக்கு தட்டிக் கொடுக்கும்..!!
வெளிச்சத்தில் அவை அனைத்தையும் பார்க்கும் பொழுது ஏதும் நடக்காதது போல் காட்டிக் கொள்ளும்...!!