தமிழின் சிறப்பு -2
மகான் புத்தர் பேசிய பாலி மொழி இன்று வழக்கில் இல்லை .
இயேசு கிறிஸ்து பேசிய அரெமிக் மொழி இன்று வழக்கில் இல்லை.
எகிப்தை ஆண்டு மாபெரும் பிரமிடுகளை கட்டிய பாரோ மன்னர்கள் பேசிய காப்டிக் இன்று வழக்கில் இல்லை.
மாயன் நாகரீக மக்கள் பேசிய யூகடெக் மொழி இன்று வழக்கில் இல்லை.
யூதர்களின் தாய்மொழியான எபிரேபியம் ஹீப்ரூ மெல்ல உயீர்பெற்று வருகிறது. சந்திரகுப்தர்கள் பேசிய சமஸ்கிருதம் வழக்கொழிந்து உயிர்ப்பெற்று வருகிறது. இவைகளின் சமகாலத்திய மொழியான தமிழ் இன்னும் வாழ்கிறது. எத்தனை பன்மொழி படையெடுப்பு வந்தாலும் அழிக்கமுடியாது விஞ்சி நிற்கிறது தமழ்.
பேரரசர் அசோகர் கால கல்வெட்டுகள் முறையே சோழர், பாண்டியர், கேரள புத்ரர் மற்றும் ஸத்ய புத்ரர் குறித்துப் பேசுகின்றன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள “ஸத்ய புத்ரர்“ என்ற கேள்வி வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்பட்ட பொழது. விழப்புரம் மாவட்டம் ஜம்பையில் ஓரு குகையில் கண்டறியப்பட்டது.
சமணர்களுக்கு கற்படுக்கைகள் செய்து கொடுத்த அதியாமனை அந்தக் கல்வெட்டு இப்படிக் குறிப்பிடுகிறது “ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி.”
ஜம்பைக் கல்வெட்டு தகவலை வெளிகொணர்ந்தவர் டாக்டர்.இரா. நாகசாமி, “இந்தகல் வெட்டின் காலம் 2300 ஆண்டுகளுக்கு முந்தையது.
@@@@@@
நன்றி: முகநூலில்: Alagesan to தமிழ்ப் பணி மன்றம்