இரவல் கவிதை

பள்ளி ஆண்டு விழாவில்
ஆளுக்கொரு போட்டியில் சேர,
நான் மட்டும் தனித்து நின்றேன்...!
என்னை அழைத்த ஆசிரியை
நீட்டிய காகிதத்தில்
தீட்டிய கவிதை ஒன்றை கொடுத்தார்..
வாழ்க்கை ஒரு வர்ணஜாலம்
எனும் தலைப்பில்,
முட்டி முட்டி மனப்பாடம் செய்து மூச்சு விடாமல் சொன்னேன் ,
முதல் பரிசு எனக்கென்றார்கள்..!
அன்று நான் பெற்ற இரவல் கவிதைக்கு இன்று வரை வட்டி செலுத்துகிறேன்
என்னுடைய அத்தனை கவிதைகளையும்...!்

எழுதியவர் : சுரேஷ் காந்தி (26-Jun-16, 11:18 pm)
Tanglish : iraval kavithai
பார்வை : 357

மேலே