தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 3--முஹம்மத் ஸர்பான்

21.குப்பைகள் பொறுக்கும் கனவின் விரல்களில்
குப்பையாய் கிடக்கும் சாதித்தவன் புகைப்படம்

22.அஞ்சலோட்ட வீரனின் கல்லறை புத்தகத்தில்
மாற்றுத்திறனாளியின் திருடப்பட்ட நாட்குறிப்பின் வாசகங்கள்

23.கடிகாரத்தின் ஆயுளை எண்ணிப் பார்க்கும் முயற்சியில்
மரணத்தை வாங்கி தோற்றுப் போகிறது வாளறுந்த பல்லிகள்

24.சமுத்திரங்கள் வற்றுகையில் குளமும் பருந்திடம்
மீனை இரையாக கொடுத்து பரிதாபமாக காத்திருக்கிறது
சிறகின் உச்சரிப்பில் மழைத்துளிகள் பூமியை நாடுமென...,

25.உடைந்த கண்ணாடித் துண்டுகளை ஒட்டிப் பார்க்கையில்
ஏழை வீட்டு முதிர்கன்னியும் உலக அழிகியாய் தெரிகிறாள்.

26.சிதைந்த கருவறையில் சுமந்த பிள்ளையின் எதிர்காலம் கருதி
பாழடைந்த அறைக்குள் சேலை அவிழ்க்கிறாள் சிகப்பு விளக்கு பெண்

27.நட்சத்திரங்களையும் காமன் விலை கொடுத்து வாங்குகிறான்
விபச்சாரியின் மறைமுகத்திடலில் ஒளிந்த மச்சங்களாக.....,

28.வாழ்க்கையெனும் நீதிமன்றத்தில் நிரபதாரியாக எண்ணமிருந்தும்
கைதியின் கூண்டில் கை கட்டி நீற்கிறது மன சாட்சி...,

29.மலடியின் கருப்பைக்குள் பூச்சிகள் விளைவதில்லை..
செல்லப் பிள்ளையென கூண்டுக்கிளிகளுடன் தனிமையில் பேசுகிறாள்.

30.நாட்காட்டியின் பக்கங்களில் வட்டமிட்ட நாளொன்று
விடியாத பொழுதின் மறதியை ஞாபகமூட்டிச் செல்கிறது உன் மரணமாக..

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (27-Jun-16, 5:28 am)
பார்வை : 133

மேலே