மரித்தது நானல்ல மனிதம்

நான் காத்திருந்தது
தொடர் வண்டிக்காக
எனைத் தொடர்ந்து வந்த
மரணத்திற்கு அல்ல

தாயிடம் சொல்லிவிட்டு
தந்தையிடம் விடைபெற்று
இந்த காலை நான்
இங்கு வந்தது
இந்த காலன் என்னை கூட்டிச்செல்லவோ

கேடு கெட்ட நாயொன்று
மனித உருவில் மனிதம் பேசி
எனைக் கொல்ல
இன்று வந்தானோ

நான் இல்லை என்றதும்
நடந்தது இன்னதென்று
கற்பனை நாடகம் தான்
அரங்கேறுகிறதே கலையரங்கம் இல்லாமலே

ஊரெல்லாம் பேசிடுதே
பழி பாவம் அனைத்தும் தான்
எனக்கென இருந்தது
என் உண்மையான மனசாட்சியே
அதுவும் இன்றில்லையே

வேடிக்கை பார்க்கத்தான்
இந்த மானிடர் கூட்டம் என்றால்
நாமெல்லாம் வாழ்வது
மிருக காட்சி சாலையிலா

மனிதமெல்லாம் மரித்தததுவே
நான் கண் மூடும் தருணத்திலே
கூக்குரலிட்டும் கூச்சலிட்டும்
உதவிக்கு ஒருவரும் இல்லையே

மனிதனெல்லாம் குரங்கென்றால்
இந்த குரங்கு கூட்டத்திற்க்கு
நல் வழியொன்றை காண்பிப்பாயோ
என் அன்னை பராசக்தியே!!

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (27-Jun-16, 3:12 pm)
பார்வை : 335

மேலே