மறந்துவிடுவோமோ ••
தாவரங்களிலிடத்தில்
மடியேந்தி பிச்சையெடுத்து!
மடிக் கீரை பறித்து வந்து!
உப்புப் புளி காஞ்ச மிளகாயிட்டு கடைந்து தாளித்து மூடி வைத்து !
இருந்த ஒருபடி நொய்யரிசி!
உலையை மூட்டி வேகவைத்து வடித்து !
தாங்கராவில் அதைக் கொட்டி ஆறவைத்து !
ஆறு பிள்ளைகளுக்கு, மற்றும் கூலிக்காரர் எங்கள் தந்தைக்கும் பரிமாறி !
வடித்த நீராகாரத்தை
உப்புப் போட்டு தானருந்தி !
வறுமையை வந்த வழியே போகச்சொல்லி வழியனுப்பி வைத்தவள் தான் எங்கள் தாய் !
சாதத்தின் மேல் ஊற்றினது !
பலவகையைச்சேர்ந்தக் கீரை குழம்பென்றாலும் !
மூலிகை லேகியமே என்றெண்ணி உண்டோமே!
வேம்பின் கொழுந்தை நையக் குழைத்து உருட்டி அச்சு வெல்லம் கையில் கொடுத்து விழுங்க
வைத்தாளே எங்கள் தாய் !
வாரமொருமுறை எள்ளு
எண்ணெய்யை கண்ணில்
காதில் மூக்கில் வாயில் தேய்த்து ஊரவைத்து!
கார்ப்புரேஷன் தண்ணி
குழாய்க்கடியில் குந்த வைத்து !
சியக்காய்த் தூளால் குளிப்பாட்டி ஆறு பிள்ளைகளுக்கும் தலையை முந்தானையால் துவட்டின தாய் !
சோற்றுக் கற்றாழை தோலை உரித்து அல்வாவைப் போல
திடுக்கு திடுக்கென விழுங்க
வைத்த எங்கள் தாய் !
அதனால் தானோ நாங்கள் இன்று வரை மருந்தக படி ஏறி அறியோம் !
அதை பெரியவர்களானப் பின்னும் எங்களை எண்ணிப்பார்க்க வைக்கிறது !
நாங்கள் ஒருவருக் கொருவர் "மறந்துவிடுவோமோ சொல்லிச் சொல்லி !
ஓயவில்லை இன்றவள் நினைவு நாள் அயர்ந்து உறங்கும் அவள் கல்லறையிலே.