காதல் நீ
எழுதுகோல் கொண்டு உனை எழுத தோணுது,
அளவுகோல் கொண்டு உனதழகை அளக்க தோணுது,
மயங்கிக் கிடக்க சொல்லுது உன் கண்கள்,
உன்னழகுக் கண்டு நாணம் கொண்டுத் தேய்கிறது வான் திங்கள்,
உன் விரல் பிடித்துப் பல வழி நடக்க ஏங்கிக் கிடக்குது என் ஆவல்,
எனைத் திரும்பி பார்க்கும் நேரமெல்லாம் மனதில் குத்தாட்டம் போடுது என் காதல்...!