என்னவளே
![](https://eluthu.com/images/loading.gif)
கனவில் வரும் தேவதையே !
என் கண்ணில்
குடிக்கொள்ளும்
உன் பிம்பம்
நிஜமா நிழலா
தெரியவில்லை !
ஆனால்................
கண்கள் மூடினால் - உன்
விழிகள் மின்னொளியாய்
வீசுகிறது !
நிதமும் இரவில்
என் தூக்கத்தை
சூறையாடி
உன் பிம்பத்தை
எதிரொளிக்கிறாய் !
சொப்பனக்குமாரியே !
நாளும் உன்
நினைவில் மூழ்கி
தத்தளிக்கிறேன்..............
தத்தளக்கும் என்னை
காப்பாற்ற நிஜத்தில்
ஒருமுறை வாராயோ !
கனவில் வலம்வரும்
உன்னை என்னவளாக
உன் கைப்பிடிக்க
ஒருமுறை நேரில்
வாராயோ!