உரைக்குது காட்சியொன்று
ஓவியம் உரைக்குது உண்மையொன்று
~~ஒன்றே உயிர்கள் உலகிலென்று !
ஓங்கி ஒலிப்பதும் ஒன்றேயொன்று
~~ ஒருபோதும் மறவாதே நீயென்று !
உயிர்கள்வாழ நீரும் தேவையொன்று
~~உள்ளவரை வாழ்க ஒற்றுமையென்று !
உண்மை உரைக்குது காட்சியொன்று
~~உயிர்களை உலகிலே மதித்திடென்று !
வாடுகின்ற உயிர்களுக்கு உணவொன்று
~~வாழ்கின்ற காலமும் வழங்கிடென்று !
சமுதாயப் பணிகளை நாளுமொன்று
~~சாகும்வரை ஆற்றுவது கடமையென்று !
பழனி குமார்