தினம் ஒரு காதல் தாலாட்டு தனிமை 64 = 149
“என் சின்னஞ்சிறு கண்களிங்கே
சிருங்காரம் கொள்வதென்ன…?
அது சிருங்காரம் கொள்வதற்கு…..
என் சிங்காரன் வருகைதானே…!”
காதலென்றப் பேரிலே கடுதாசிப் போட்டாரு
காத்திருக்கும் கண்களுக்கு கவிவிருந்து அளித்தாரு
வழிநெடுக மலர்தூவி என்ராசாவை வரவேற்பேன்
வழிமேல விழிவைத்து வாழ்த்துக்கள் நான் படிப்பேன்
என் கனவெல்லாம் நனவாக என் ராசா வருவாக
இவதான் என் ஒய்ப்புன்ன்று ஊரெல்லாம் உரைப்பாக..!
“என் சின்னஞ்சிறு கண்களிங்கே
சிருங்காரம் கொள்வதென்ன…?
அது சிருங்காரம் கொள்வதற்கு…..
என் சிங்காரன் வருகைதானே…!”
ஊரெங்கும் ஒரே பேச்சு
என் ராசாவே உன்னைப்பற்றி…
ஊரிலுள்ள படித்தவர்களில்
நீதானே படிப்பில் படுசுட்டி…!
பட்டிக்காட்டு பாவனைகள்
பட்டிணத்துக்கு ஒத்துவருமா
பட்டிணப் பளிங்கு பெட்டகம்போல்
இந்த பட்டிக்காட்டாளும் மாறனுமே
அதற்காகவே நானிங்கு அழகழகான ஆபரணங்கள்
வகைவகையாக வாங்கி வைத்திருக்கிறேன்
அதை என் ராசாவே நீ வரும்போது
வாகாக அணிந்துக்கிட்டு அன்பாக வரவேற்பேன்
என் கனவெல்லாம் நனவாக என் ராசா வருவாக
இவதான் என் ஒய்ப்புன்ன்று ஊரெல்லாம் உரைப்பாக..!
“என் சின்னஞ்சிறு கண்களிங்கே
சிருங்காரம் கொள்வதென்ன…?
அது சிருங்காரம் கொள்வதற்கு…..
என் சிங்காரன் வருகைதானே…!”