கம்மல்நாத்து

ஏண்டப்பா பேரா, வடநாட்டுக்குப் போயி ஒரு ரண்டு வருசம் வேலை பாத்திட்டு வந்த. உம் பேர கம்மல்நாத்துன்னு மாத்திட்டயாமே?

@@@@
மொதல்ல எனக்கு உங்க மகனும் மருமகளும் எனக்கு வச்ச பேரு என்னன்னு சொல்லுங்க பாட்டி?

###
ஏண்டா பொடிப்பயலே பேரா, அது கொடவா எனக்குத் தெரியாது. அந்தப் பேரு கமலநாதன்.

#####
வடநாட்டிலெ எல்லாம் இந்தி பேசறவாங்க. அவுங்கெல்லாம் எம் பேரச் சரியா உச்சரிக்கத் முடியாம கமல்நாத், கமல்நாத்’ன்னு தான் கூப்புடுவாங்க. சரி கமல்நாத் நல்லா இருக்குதுன்னு மாத்திட்டம் பாட்டி. நீங்க அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்-னு கேட்டுத் தொல்லை பண்ணறதுக்கு முன்னாடி நானே சொல்றேன். கமல்னா தாமரை-ன்னு அர்த்தம். நாத்-ன்னா இறைவன், பாதுகாப்பவர்,அடைக்கலம் தருபவர்-ன்னு பல அர்த்தம் இருக்கது பாட்டிம்மா.
@@@
பரவால்லடா பேரா. இந்திப் பேரா இருந்தாலும் நல்ல அர்த்தமான பேருதாண்டா கம்மல்நாத்து’ங்கற பேரு.

@@@@

பாட்டி திரும்பத் திரும்ப என்ன கம்மல் நாத்து-ன்னு கூப்புடு என்ன காதுல கம்மல் போட வெச்சி என்ன நம்ம கிராமத்துக்குப் போயி நாத்து நட வெச்சடாதீஙக பாட்டி.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி: விக்கிபீடியா.The Sanskrit word nātha नाथ literally means "lord, protector, refuge". The related Sanskrit term Adi Natha means first or original Lord, and is therefore a synonym for Shiva, the founder of the Nāthas. Initiation into the Nātha sampradaya includes receiving a name ending in -nath
@@@@@@@@@@@@@@@@@@@@@@
படம் நன்றி: அப்புசாமிகாம்

சீரிளமை குன்றாஎம்மொழி செம்மொழி

எழுதியவர் : மலர் (29-Jun-16, 8:18 pm)
பார்வை : 72

மேலே