அழகே அழகாய் - 2

நிலக்கரிச் சுரங்கத்தில் பதிந்த
கருமை புல்வெளி
அரங்கமான
கருநீள கூந்தலும்!

புல்வெளியில் அங்கம் வகிக்கும்
பனித்துளிகளின் ராஜாங்கத்தில்,
மணம்வீசும் பஞ்சாங்கமாய்...
இவள் சூடிய
மல்லிகைப்பூக்கள்
மண அழகு!

வெள்ளி நீரோடையில்
வெண்கலம் ஊற்றெடுக்க!
சொல்லிமாழாத
சொர்க்கத்தின் வாசலாய்!
நெற்றியில் பொட்டழகு!

சிற்சில முடிமணிகளை...
கோர்த்த முத்துமாலையை!
அடியடியாய் சேர்த்த,
கருமை வானவில்லை
வளைத்த இருபுருவங்கள்...
வான அழகு!

நிலவென்னும்
வெள்ளியை உருக்கி!
பாதரசக் கலவையில் மருக்கி!
பலகாரத் தட்டில் பதுக்கிய!
பால்விழிகளிரண்டும்
பலத்த அழகு!

விழிகளில் நீந்தும்
விண்மீன்களனைத்தும்
கருவண்ண பொட்டாயமைந்த
கருவிழிகள் அழகு!

ஜலத்தில் விழுந்த சிட்டுக்குருவி!
சிறகடிப்பதைப்போல!
படபடத்து...
இறகைவிரித்தாடும்
இமைகள் இன்ப அழகு!

ஒவ்வொன்றாய் தொடுக்கப்பட்ட
வீணை நரம்புகள்!
விழியோடு, உரசி
மெளனராகமிடும்!
இமைமுடிகளும் அழகு!

அன்னக்கொடியின் அழகில்!
மின்னல்கொடியை
இழுத்துக்கட்டிய,
மின்கலவிழியில் வீசும்...
காதல் கதிர்வீச்சுகள் அழகு!

ஆண்களின் ரோமங்களினூடே!
ஆராய்ச்சி பணியை...
முடுக்கிவிடும்
அஞ்சுகப் பார்வை!
அசுர அழகு!

ஆகாயத்திடலில்!
தங்கமாய் மிளிர்ந்து!
தாமரைமடலாய் ஜொலிக்கும்
செவிமடல் அழகு!

அதில்
அலைஅலையாய் ஆர்ப்பரித்து
வரும் தென்றல்
ஓடையில் முட்டி!
தெம்மாங்கு தாளமிடும்...
லோலாக்கு அழகு!

நவரத்தின சிறையில்
முகலட்சணமாய்
பதிவுப்பெற்ற...
மூன்றாம்பிறை மூக்கு!
மொட்டழகு!

ஆழிமுத்தில் சிலுப்பி!
அமுதப்பாலில் குழப்பி!
அஞ்சமிர்தத்தை நிரப்பி!
முக்கனிச்சுழையின்
சுவடுகளை பதுக்கிய
கோவைப்பழ உதடுகள்
உச்ச அழகு!

வானத்து தேவதைகளின்...
ஆகச்சிறந்த அழகிற்கு
முற்றுப்புள்ளியாய்!
பிரம்மன் வைத்த
ஒற்றைப்புள்ளி! என
இவள் உதட்டோரத்தில்...
உதிர்ந்த மச்சம்
கோல அழகு!

குற்றால அருவித்துளியில்,
குறிஞ்சிப்பூ பூத்து!
மத்தளத்து ஓசையில்,
மத்தாப்பூ பூக்கும்!
மந்திரப் புன்னகை...
மாய அழகு!

பொதித்து வைத்த முத்து
பொக்கிஷங்களில்!
அழகு தந்திரத்தோடு
தன்னாட்சியமைத்து
அரியணையில்
வீற்றிருக்கும் அழகின்
வித்தான! தெத்துப்பல்
திகட்டாத அழகு!

நந்தவனச்சோலையில் வீசும்,
இளவேனிர்த்தென்றல் உரசி!
தேனின் தேக்கடி கன்னத்தில்
விழுந்து தேகம் இளைப்பாறும்
நெற்றிமுடிகள் அழகு!

பாரிஜாதப் பூக்களை
ஸ்பரிசமிடும்
பவளங்களைப்போல! இவள்
வதனத்தில் உதிக்கும்!
பருக்களனைத்தும்
பவள அழகு!

வங்கக்கடலில் மையம்கொள்ளும்
குறைந்தழுத்தத்தைப்போல!
அவ்வப்போது!
இவள் வதனக்கடலில்
மையம்கொண்டு!
மோகப்புயலை, அமோகமாக
பாய்ச்சும் கன்னக்குழி!
காணக்கிடைக்காத அழகு!

அஷ்டலட்சணமும் பொருந்திய
அக்க்ஷய பாத்திரமான,
சாமுத்திரிக வதனம்!
வான அழகு!

அன்னப்பறவையின் நகலெடுத்து!
ஐம்பொன்னின் அணிவகுத்து!
சங்கமித்த!
சங்கு கழுத்தழகு!

காமத்துப்பாலின்
அதிகாரங்களனைத்தும் ஆழப்பதிந்த
அமுதம் சுரக்கும் பாற்கடலின்!
மர்மத் தீவினை! மலர்ப்பந்தலிட்ட!
மார்பகங்கள் பேரழகு!

வர்ணங்களில் வளமை
கொழிக்கும் வானவில்லை!
வலுவிழக்கச்செய்த
வளையல்களுக்கு!
அழகு உரமிட்ட செங்கோல்
கரங்கள் வண்ண அழகு!

பலகோடி பூக்கள் பூத்து!
பட்டுவர்ண நூற்கோர்த்து!
சகட்டுமேனிக்கு தேன்வார்த்து!
முகிலை அளவெடுத்து தைத்த
இவளது துகில்! தூய அழகு!

தித்திக்கும் அடிக்கரும்பாய்!
தேகத்தில் எத்திக்கும்,
பத்தியெரியும்...
அழகு தீச்சாரல்கள்!
அழகோ அழகு!

சர்க்கரைப் பாகினை சுரக்கும்
சந்தனமேனி இடையினில்!
ஒய்யாரமாய் வந்தமர்ந்து!
நர்த்தனம் ஆடும்
வியர்வைத்துளிகள்!
விண்ணழகு!

வெள்ளியின் வித்துக்களில்,
வெண்பனித்துளிகள் கோர்த்த...
பாதக்கொலுசில் துள்ளிவந்த
தாலாட்டு ரிதங்களால்!
துயிலடைந்த...
தங்கரதங்களான பாதங்கள்...
பொன்னழகு!

அழகே அழகாய் படைத்த அழகியிவளிடம்
அழகிலா அங்கமும் உண்டோ!

எழுதியவர் : Maniaraa (1-Jul-16, 10:52 am)
பார்வை : 796

மேலே