வேண்டாம் இடையூறு

மண்ணில் மாளிகை கட்டியேதான்
மனம்போல் ஆட்டம் போடுகின்ற
வண்ணப் பூக்களாம் பிள்ளைகளின்
வயதுக் கேற்ற விளையாட்டாய்
எண்ணம் போல நடக்கட்டும்,
எல்லாம் அவர்தம் உயர்வுக்கே,
உண்மை உணர்வீர் பெற்றோரே
உங்கள் தடைகள் வேண்டாமே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Jul-16, 6:28 am)
பார்வை : 93

மேலே