எனை ஈர்க்கும் விடிகாலை

எனை ஈர்க்கும் விடிகாலை!!
************************************
விடி காலைப் பொழுதினிலே
பனி படர்ந்த வேளையிலே
பட்சிகளின் இன்னிசையும்
இறை தொழுவார் பன்னிசையும்
எனைத் துயிலெழச் செய்ததென்ன !!

கனி உமிழும் பனி நீரும்
மலர் தடவும் ஊதக் காற்றும்
அது தரும் நறு மணமும்
வானவர் உலாவும் பூங்காவாய்
அப்பொழுது தெரிவதென்ன!!

மங்கிய ஒளியினிலே
இலையசையும் மரக்கிளையினிலே
புள்ளிக் குயிலொன்னு சொல்வதென்ன
சோடிக் குயிலது புரிந்ததென்ன
இயற்கையதன் விந்தைதானென்ன!!

கீழ் வான்தனிலே
கீறிய ஓவியமென்ன
பள பளக்கும் திரையிட்டு
செம்மை நிறக் கலவை பூசிய
இவ்விடிகாலை அழகுதானென்ன!!

இவ்விழாக் கோலம் காணா
இரு விழிகலென்ன
ரசிக்கா செவியென்ன
உணராத உடல்தான் என்ன
எழுந்து சுவைக்கா அவ்வுளம்தானென்ன!!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (1-Jul-16, 2:06 pm)
பார்வை : 295

மேலே