எப்படித்தான் மறப்பேன்-

இன்முகமாய் மலர்ந்தே என்றும்
-----------இரத்தத்தை பாலாய் புகட்டி,
தன்னுயிரென எண்ணி காத்தவளை
----------எப்படித்தான் மறப்பேன் சொல்லு
விழிகளை இமைகள் காப்பதென
-----------தழுவியும், சீராட்டி கொஞ்சிட்ட
அழியா பேரன்பு பெட்டகத்தை
-----------எப்படித்தான் மறப்பேன் சொல்லு?

தனியாய் தனக்கே ஒதுக்காமல்
----------தனக்கு கிடைத்த செல்வத்தை
இனிதாய் செலவிட்ட தந்தையை
---------எப்படித்தான் மறப்பேன் சொல்லு!
உணவோடு உலகியலும் அதனுடே
----------கண்டிப்பும் கடமையுமாய், நல்ல
குணத்தோடு வளர்த்த தந்தையை
----------எப்படித்தான் மறப்பேன் சொல்லு?

இன்குரலால் வகுப்பு தன்னில்
----------ஒண்டமிழ் கவிதைகள் நயமுற
உற்சாகமாய் எமக்களித்த ஆசானை
----------எப்படித்தான் மறப்பேன் சொல்லு?
அறிவியல் அற்புதங்கள் தன்னை
----------அழகுற விளக்கமாய் எமக்களித்து
ஏற்றிவிட்ட ஆசானின் திறத்தினை
---------எப்படித்தான் மறப்பேன் சொல்லு?

இன்னலும் இடையூறுகள் எதிர்பட
-------------என்னையே நம்பிடு என்றே
எனக்குள்ளே குரல்கொடுத்து என்றும்
----------இணைந்தே இருந்திடும் துணையாய்
பிணக்கின்றி, பேதமின்றி, பொருளேதும்
-----------படைத்தலின்றி என்னை பக்குவமாய்
வினையாற்றி விடையளித்தே என்னுள்
--------------அருளாளனை எப்படித்தான் மறப்பேன்?


துள்ளி திரிந்த காலத்திலும்
----------துவண்டு கிடந்த நேரத்திலும்
அல்லிமலர் போல வந்தவள்
--------அழகு தேவதை அவள்தானே
கல்லை மலையென நினைத்து
---------கவலையில் ஆழந்த பொழுது
கவலையை கரைத்த காதலியை
---------எப்படித்தான் மறப்பேன் சொல்லு?

---கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (2-Jul-16, 12:38 pm)
பார்வை : 91

மேலே