வாழ்க்கை

விட்டு போகிறேன் (என்றால் (விளையாட்டிற்காக))
விடாமல் கட்டிக்கொள்ளமாட்டாயா
போகிறேன் என்றால்
(அப்படியே விட்டுவிடுவாயா)
போகாதே என்று கூறாமாட்டாயா
இல்லை எனை போல்
என் பின்னாலே வருவாயா
உன்னிடம் பேச வந்து
பேசாமல் நிற்கும் பொழுது
உணர்ந்தாயா
இந்த காதல் படுத்தும் பாட்டை
என்போல்
உன்னை பார்க்க வந்து
பார்த்தபின்
எதற்காக வந்தாய்
என்றால்
சும்மா எனும்பொழுது
புரிந்ததா என் மனதின் எண்ணம்
உன்னை தூரத்தில் கொஞ்சுவேன்
அருகில் மிஞ்சுவேன்
கெஞ்சவைப்பேன்
அதனால் எனை ஆணவக்காரி
என்று நினைக்கிறாயா
உனை வெறுப்பேற்றி பார்ப்பதில் எனக்கு ஒரு சந்தோஷம்
இந்த ஆணவக்காரி
உன்மேல் பைத்தியமாய் உள்ள
பைத்தியக்காரி
உன்னை தவிர அவளுக்கு வேறு உலகம் கிடையாது
ஆதலாலே எப்பொழுதும்
உன்னோடு விளையாடிக்
கொண்டிருக்கிறாள்

நீ அழுதா என்னால அத ஏத்துக்க முடியாது
உன் கண்ல இருந்து நீர்
நான் செத்தா தான் வரணும்


உன்னோட கோபத்த தாங்கிக்ற மனசால
ஒரு நொடி பிரிவ கூட தாங்கிக்க முடியல
எவ்ளோ கோவமா இருந்தாலும்
என்ன பிசைஞ்சு எடு
என்னவிட்டு பிரியணும்னு மனசால கூட நெனைக்காத
அது வரைக்கும் நான் முதல்ல உயிரோட இருக்கமாட்டேன்

நான் உன் கூட நெறையா விளையாடினாலும்
என் காதல் விளையாட்டில்ல
என் காதல் நிஜமானது
புயல்ல சிக்கி இறுதியில
நிக்கற இலைய போல
எவ்வளவு பிரச்சனை வாழ்க்கையில வந்தாலும்
இன்னைக்கு பிடிச்ச கைய விடாம இதே காதலோட
இல்ல இத விட ஜாஸ்தியான
காதலோட
உங்கூடவே கடைசி வரைக்கும் வருவன்

நீ போனு சொன்னாலும்
நான் உன்ன விட்டு போக மாட்டேன்
ஏன்னா எனக்கு உன்ன பத்தி நல்லா தெரியும்

நீ எதுக்காக சொல்றன்றத விட
அத சொல்றதுக்கு நீ எவ்ளோ கஷ்டப்பட்ருப்பனு
எனக்கு மட்டும் தான் தெரியும்
நான் இல்லாம நீ எவ்ளோ வருத்தப்படுவனு
எனக்கு தானே தெரியும்
உன்ன நான் என்னைக்கும்
வருத்தப்பட விடமாட்டன்டா
(உன்னோட நான் நெறையா நாட்கள் வாழணும்டா
உனக்கும் இப்படி தான் தோனும்
ஆனா ஏன்டா ரெண்டு பேருமே சொல்லிக்க மாட்டிங்க்றோம்
ரெண்டு பேருக்கும் ஊடல் செய்யவே சரியா இருக்குது
உன் விரல் என் மீது படும் பொழுது
என் காதல்
என் கண்ணில்
வெளிப்படுவதை உன் கண்ணிலும்
காண்கிறேன்
நம் காதலின் அடையாளம்
நாம் இருவரும் உயிரை கொடுத்துக்கொண்டிருந்தோம்
நம் உயிருக்கு
இன்று உயிர் வந்து நமை
அரவணைக்கிறது
மூவரும் ஊடல் கொண்டு
காதல் கொண்டோம்
மேலும் மேலும்
தலையணை சண்டையால்
தூக்கம் நம் உயிரை பற்ற
நம் உயிர் நமை சேர்த்து கட்டிக்கொண்டே தூங்க நாமும் நேரம் காலம் மறந்து உலகை மறந்து யாவும் மறந்து நம் உலகில் மூழ்கிப்போனோம்)

மத்தவங்க கண்ணுக்கு நீ கெட்டவனா தெரிஞ்சாலும் பரவாயில்லனு
என் நல்லதுக்காக
விளையாட்டுக்காக சொல்றீயே
உன் பாசம் யார்கிட்டயும் பாக்காதது
எனக்கு தெரியாதுன்னு
நெனைக்கறீயா
நீ என்ன நெனைப்ப
நீ எனக்காக என்னலான் செய்வனு
எனக்கு நல்லா தெரியும்
எனக்காக நீ என்ன வேணும்னாலும் செய்வ
அது தெரிஞ்சும் நான்
என் மேல நீ பாசமே இல்லாதது போல்
ஏட்டிக்கு போட்டி பேசுவன்
அதுக்கு காரணம்
உன் பாசம் எனக்கு வேண்டாம்னு அர்த்தமில்ல
உன் பாசம்
எப்பயும் இதே போல நெறைய
எனக்கு கெடச்சிட்டே இருக்கணும் என் ஆயுசுக்கும் அதுக்காக தான் அந்த நாடகம்லான்

இந்த ஆயுசு இருக்க வரைக்கும்
உங்கூட விளையாடிட்டே இருப்பன்
ஒரு நாள் விளையாடிட்டே
இருக்கும் போது
உனக்குள்ள காணாம போய்டுவன்

உன் மடியில விழும்போது
எனக்கு அப்படியே
இருந்துடலாம்னு தோனும்
நீ கேப்பயேனு தூக்கம் வருதுனு சும்மா சொல்லிவைப்பன்

ஆனா
உன் கண்ண பாத்ததும் அதல கிறங்கி
உன் நெஞ்சுல சாஞ்சிக்கணும்ன்ற ஆசையில
உன் மடியில படுக்கணும்ன்ற நெனப்புல தானா (சில சமயங்கள்ள நானா)
மயங்கி விழறன்


அழகுல பாத்து மயங்கி
வந்ததில்ல
எங்க காதல்
மனசுல வந்து
உசுருல கலந்து
உசுரா ஆனது
எங்க காதல்

பணத்த பாத்து வந்ததில்ல
எங்க காதல்
ஒருத்தருக்காக ஒருத்தர்
உசுரையே விட்டுக்கொடுப்பதே
எங்க காதல்

உடம்பு சுகத்துக்காக இல்ல
எங்க காதல்
எனக்கு எல்லாமே அவர் தான்
அவருக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வன்
என்னையே தருவன்
எனக்காக எல்லாத்தையும்
செய்துட்டு
எதுவும் தெரியாத மாதிரி
என் கைய பிடிச்சிட்டு என் பக்கத்தில உக்காந்திட்ருப்பாரு
எனக்கு அந்த நொடியின் உணர்வ சொல்ல எங்கிட்ட வார்த்தையே இல்ல
அப்ப தானாவே
என் தல அவர் மார்புல சாஞ்சி
ஒரு சொட்டு கண்ணீர் கண்ல இருந்து கொட்டும்
அவர் அத துடச்சிவிட்டு தட்டிகொடுப்பார்
அப்படியே இறங்கி அவர் மடியிலே படுத்துடுவன்
அந்த நொடி என்ன சுத்தி என்ன நடக்குதுனே எனக்கு தெரியாது
இந்த உலகத்யே மறந்து
அவர் மடியில கிடப்பேன்
அவர் எனை தட்டிக்கொடுத்து
தூங்கவைப்பார்
இப்படியே நாட்கள் நீளக்கூடாதா
என்று இருவரும் தனித்தனியே
ஒன்றாய் ஒன்றையே
நினைத்து கொண்டிருக்க
அவர் என் நெஞ்சில் சாய்ந்து படுத்திடுவார்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-Jul-16, 2:21 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 502

மேலே