இதழகல் வெண்பா
உதடு ஒட்டாமல் குவியாமல் பாடபெறுவது "இதழகல் வெண்பா" இதனை "நிரோட்டகம்" என்று முன்னோர் வழங்குவார். இதோ நான் முயன்ற இதழகல் வெண்பா !
நீயென்றால் நீயல்ல நானென்றால் நானல்ல
தீயென்றால் சாடுகின்ற தீயல்ல - தேயந்தான்
சாதலைக் கண்டாலுஞ் சாதலல்ல ! இஃதெல்லாம்
காதலதன் செய்கையெனக் காண் !
-விவேக்பாரதி