உரிமை உள்ளதா
என்னை விட்டு நீங்க முயலும் உன்னை
இழுத்து அணைத்துக்கொள்ளும் உரிமை
என்னக்குள்ளதா ?
துணை பலயிருந்தும் தனிமையில் உலாவும் உன்னை
என் இமைகளுக்குள்ளே குடிவைக்க உரிமை
என்னைகுள்ளதா ?
அடைய முடியா எல்லைகளை அடைந்த உன்னிடத்தில்
அடிமையாகிறேன் என கூற உரிமை
என்னைக்குள்ளதா ?
பிறிய பிறிய பந்தம் முடங்கும் என அறியா உன்னை
விரட்டி விரட்டி அடையும் உரிமை
எனக்குள்ளதா ?
அருகிலிருந்து என் ஆசைகள் உணராத உன்னை
என்னைவிட்டு தொலைதூரம் போகதே என கேட்க உரிமை
என்னக்குள்ளதா ? ?