என் தாயே
எழுத எழுத அமுத சுரபியாய்
கொட்டும் தமிழ் தாயே
உன்னை பெற எத்தனை தவம் நான் செய்தேனோ
வேறு தாய் வயிற்று பிள்ளை என்றும் பாராமல்
உன் மகளாக அரவனைத்தாயே
உனக்கு எத்தனை நன்றிகள் நான் கூறுவதோ
தொட்டிலிருந்து பருவம் வரை ஆளாக்கிய
உன்னை காலசக்கர சுழல்ச்சியில் நான் பிரிந்துவிடுவேனோ
பயந்து தவித்து கிடக்கும் எனக்கு
உந்தன் துணை இறுதி மூச்சு வரை கிட்டுமோ