மன்னித்துவிடு சுவாதி
திருப்பாச்சி அறுவாவே..!
மரங்களை வெட்ட பயன்படும் நீ
இப்போதெல்லாம்
மனிதர்களை வெட்டவே
அதிகமாக பயன்படுத்தப்படுகிறாய்…!
பட்டாசு தயாரிக்கும் ஊருக்கு
பட்டா கத்தியால் கெட்ட பெயர் !
வெட்டுப்பட்டு இறந்த
பட்டினத்து கெட்டிக்காரிக்கு
வந்துச் செல்லும் ரயில்கள்
நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில்
சிறிது நேரம் துக்கம் அனுஷ்டித்து
ஸ்வாதி எங்களை மன்னித்து விடு..
ஸ்வாதி எங்களை மன்னித்து விடு…
என்றபடியே நகர்கின்றன….!
மனிதர்களின் அஞ்சலியை நாமறிவோம்
நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் விட்டபடி இருக்கும்
அனுதாப கண்ணீர் அஞ்சலியை யார் அறிவார்…?
சாய்மாறன்