உன் காதல் என்னும் மடியிலே

அன்பே...

சைக்கிள் ஓட்ட பழகி
சிறுவனாய் கீழே விழுந்த நான்
கை ஊன்றி எழுந்து நின்றேன்...

வாழ்க்கை சக்கரத்தில் ஓடி
காதல் வலையில் விழுந்த நான்
எழ முடியாமல் தவிக்கிறேன்..

என் அன்னையை போல நீ
எப்போதும் தாங்கி கொள்வதால்...
விழுந்து கிடக்க ஆசையடி...

உன் காதல் என்னும் மடியிலே !!!

எழுதியவர் : ஜெய் ரெட்டி (2-Jul-16, 7:33 pm)
பார்வை : 400

மேலே