என் இதயக் கூட்டின் நகர்ந்து செல்லா நிமிடங்கள்
நகர்ந்து செல்லா நிமிடங்கள்
அவளை பார்த்துக்கொண்டு இருந்த
அந்த நேரங்கள் !!!!!!!!!!!!
அவளின் ஓர விழிப்பார்வை
என்மேல் பட வேண்டும் என
நான் காத்திருந்த
அந்த நாட்கள் !!!!!!!!!!!!!!!!!!!
அவளோடு கைக் கோர்த்து
ஒற்றையடிப் பாதையில்
பயணித்த பரவச நிமிடங்கள்!!!!!!!!!!!!!!!!
நான் அவளோடு பேசியதை
திரும்பத் திரும்ப
நினைத்து நினைத்து
நெஞ்சிக்குள் சிரித்த
சில்லென்ற நெருடல்கள்!!!!!!!!!!!!!!!!!!!
அவளோடு ஐந்து பெண்கள்
உடன் நடந்து வந்தபோதும்
அவள் நடையை மட்டும்
பிரித்து ரசித்த
ரசனைக்குரிய நிமிடங்கள்!!!!!!!!!!!!!!!!
அழகைப் புறம்தள்ளி
அவளின் பாவனைகள் மட்டுமே
அழகு என எண்ணிய
பரவச நிமிடங்கள் !!!!!!!!!!!!
அவள் பிறந்த நாளின்
வருகையை எதிர்பார்த்து
என் பிறந்த நாளை
நான் மறந்த மகிழ்வான
நேரங்கள் !!!!!!!!!!!!!!!!!!
இவை அனைத்தும்
என் வாழ்வின்
நகர்ந்து செல்லா நிமிடங்கள் !!!
இன்று அவள் எங்கேயோ -ஆனால்
அவளோடு நான் பயணித்த
நிமிடங்களும் , நேரங்களும்
என் வாழ்வில் இன்றும்
என் கண்முன் ஓடிக்
கொண்டிருக்கும் என்
வாலிபக் காலங்கள்!!!!!!!!!!!!
காலங்கள் உருண்டு
ஓடினாலும் ,-அவளின்
நினைவுகள் - என்
உள்ளத்தின் உயிரோட்டம் !!!!!!!!!!!!!
என்னவளோடு நான் பயணித்த
பயணம் !!!!!!!!!!!!!!!!!
அன்று அவள் அழகாய்த்
தெரிந்தாள்-ஆனால்
இன்று அவளோடு
பயணித்த காலங்கள்
எத்தனை அழகு
என் இதயக் கூட்டினில்!!!!!!!!!!!!!!!!