பூக்களை பறிக்காதீர்கள்
விலங்காய் இருந்த மனித இனம்
குணத்தால் சிறக்க
உருவான தெய்வீக உணர்வாய்
காதல் தோன்றியது,
அழகு அந்தஸ்து பார்த்து
மெல்லினமாய்
உள் மனதில் ரீங்கரிக்கும் அது
உளறலில் அல்லது
உந்துதலில் வெளிப்படும்
எத்தனையோ தேனீக்கள்
எத்தனையோ மலர்கள்
பஞ்சமே இல்லாத பூங்கா வாழ்க்கையில்
மலரின் வாசத்தால்
ஈர்ப்பும் ஏற்பும்
மலரின் தார்மீக உரிமையே,
உணராமல்
தடைமீறும் தேனீக்களே
உங்களால்
பூங்காவே களேபரம் ஆகாமல்
கபளீகரம் செய்யாமல்
கலாச்சாரம் காக்க வேண்டியது
உங்கள் கடமை..
கவனம்,
பூக்களை பறிக்காதீர்கள்.