சொல்லத் தயங்கினேன்

சொல்லத் தயங்கினேன்
சுகமில்லா வாழ்வுதனை .

மெல்ல மெல்ல என்னுள்ளம்
மேவின கவிதைகள் .
உள்ளமெங்கும் துயரங்கள்
உறங்காது எனைவாட்டச்
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .


காதலின் பொருள் அறியா
காதலர்கள் இருக்கும் வரை
காதலிலும் உண்மையில்லை
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .


கொலையும் கொள்ளையும்
நிறைந்ததோர் இவ்வுலகில்
வருந்தும் இதயத்தினால்
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .


பள்ளிக்குச் செல்லுகின்ற
பாலகனோ கூலியாய்
அவதிப்படும் அவலநிலையைச்
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .


ஒருதலைக் காதலால் மோதல்
உண்டாகி கொலையும் கொடூரமும்
நிகழும் உலகைப் பற்றிச்
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .


குடிக்கு அடிமையாகி குடும்பத்தைக்
காக்கமறந்த போதையில் தள்ளாடும்
சமூகத்தின் சீரழிவைச்
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .


ஓரவிழிப் பார்வையிலே
ஒதுக்கீடு கேட்கையிலே
ஒத்தமனம் பித்தாகச்
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Jul-16, 11:29 pm)
பார்வை : 95

மேலே