அது ஒரு மாலை நேரம்
அது ஒரு அருமையான மாலை நேரம் !!!!
ஜன்னலோர இருக்கையில் பேருந்தில் பயணம் , மழை சாரல் கொஞ்சம்... குளிர் காற்று கொஞ்சம்
கேட்கவா வேண்டும். குட்டி தூக்கம் என்னை ஒட்டிக்கொண்டது.. திடீரென்று
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு மச்சான்...
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்..அம்மம்மா அப்பப்பா.......
என்ற இளையராஜாவின் ரிங்க்டோனுடனான ஒரு பருவ மங்கையின்
செல்போன் சிணுங்கியது.... ஏனோ தெரியவில்லை பட்டென பிடித்துவிட்டது அவளை...
(பின் குறிப்பு : நான் ஒன்றும் அவ்வளவு கருப்பும் இல்லை )