ஆக்காச்சு, ஆக்காச்சு
ஆக்காச்சு, ஆக்காச்சு!
@@@@@@@@@@@@
யார பாட்டிம்மா கொழந்தைகங்கள சாப்பட வைக்கறதுக்கு ‘ஆ காட்டு, ஆ காட்டு’ன்னு சொல்லி வாயைத் தொறக்க வைக்கறமாதிரி
ஆக்காச்சு, ஆக்காச்சு-ன்னு கூப்படறீங்க?
@@@
அடி வாடியம்மா வண்ணக்கிளி. எம் பேரனைத்தாண்டி கூப்படறேன். வெளையாடப் போனவன் இன்னம் வீட்டுக்கு வரல.
@@@@
பாட்டி உங்க பேரம் பேரு ஆகாஷ் . நீங்க என்னடான்னு அந்த இந்திப் பேர , ஆக்காச்சுன்னு, ஆக்காச்சுன்னு சொல்லறீங்க?
@@@@
நா என்னடி வண்ணக்கிளி செய்யறது. எம் மவன் என்னால சரியாச் சொல்லமுடியாத அர்த்தம் தெரியாத கண்ட பேர எஞ் செல்லப்
பேரனுக்கு வச்சிருக்கறான்.
@@@@@@@@@@@
பாட்டி இப்பக் காலம் மாறிப்போச்சு. பெரிய படிப்பெல்லாம் படிச்சவங்களே அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேர வைக்கறதுதான்
நாகரிகம்ன்னு நெனைக்கறாங்க. என்னோட அப்பா இந்தி ஆசிரியரா இருந்தாலும் தமிழன்ங்கற தமிழ் உணர்வோட எனக்கு
வண்ணக்கிளி -ன்னு அழகான தமிழ்ப் பேர வச்சிருக்காரு. எங்க அக்கா பேரு அழகுமயில். தமிழ் ஆசிரியர்கள் தமிழ்ப்
பேராசிரியர்கள், தமிழை வச்சு பொழப்பு நடத்தற அரசியல்வாதிங்க, சினிமாக்காரங்கள்ல கூட பெரும்பாலோர் அவுஙக
பிள்ளைங்களுக்கும் பேரப் பிளைஙகளுக்கும் வேற மொழிப் பேர்ங்கள வச்சுத்தான தமிழ் மொழியையும் தமிழர் பண்பாடு,
நாகரிகம் எல்லாத்தையும் சீரழிக்கறாங்க.
@@@@
ஆமாண்டி வண்ணக்கிளி. என்னக்கி சினிமா வந்துச்சோ அப்ப இருந்து இந்த வேலையைத் தாண்டி செய்யறாங்க. சரிடி
வண்ணக்கிளி, என் பேரம் பேருக்கு என்னடி அர்த்தம்?
@@@@@@
பாட்டி ஆகாஷ் -ன்னா திறந்தவெளி, வானம் -ன்னு பல அர்த்தம் இருக்குது பாட்டி.
@@@@@@@@@@@@
ஆக்காச்சுன்னு இந்திப் பேர வச்சு எம் பேரனையும் நாம பேசற மொழியையும் அசிங்கப்படுத்தறதவிட அவனுக்கு வானம்-ன்னே பேரு
வச்சா என்ன குடியா முழுகிப் போகும்?
####
பாட்டி உங்க மகனும் மருமகளும் வந்ததுக்கப்பறம் அவுஙககிட்டக் கேளுங்க இந்தக் கேள்விய.
@@@@@@@@@@@@@@@@@
Given Name AKASH. USAGE: Indian.: आकाश (Hindi) Means"open space, sky" in Sanskrit.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எம் மொழி செம்மொழி
சீரிளமை குன்றா
உலகின் முதன் மொழி!