மிதக்கிறேன் ••••
மதுரம் எதில் இருக்கும் ?
தேனில் இருக்கும் !
தேன் எதில் இருக்கும் ?
மலரில் இருக்கும் !
மலர் எதில் இருக்கும் ?
கொடியில் இருக்கும் !
கொடி எதில் இருக்கும் ?
நிலத்தில் இருக்கும் !
நிலம் எதில் இருக்கும் ?
அந்தரத்தில் மிதக்கும் !
பெண்ணே உன்னை
பார்த்ததில் இருந்து !
அப்படித்தான் மிதக்கிறேன் நானும் !