அழகிய தமிழ் மகள் என்னவளே அழகு தமிழ் கவிதை போட்டி

அழகிய தமிழ் மகளே.!
என்னைக் காணவில்லை. - உன்னில்
என்னை தேடித் பார்.
நான் கிடைப்பேன். - உன்
கண்ணாடி நான். - என்
முன்னாடி நின்று பார். - அதில்
என்னை நீ காண்பாய்.

நீரின்றி மீனோ? - நீயின்றி நானோ?
நானின்றி நீயோ? - நிஜமின்றி நிழலோ?
மீன்விழியாளே. - உன்
மேனியினை தழுவுகின்ற
நீரோடை நானல்லவோ.
நீ இல்லாமல் இந்த
நீரோடை காய்ந்துதான் போகும்.
நானில்லாமல் நீயும்
நெளிந்து போக இயலுமோ? - உன்
நிழலாக நான் நடந்து வர - என்
நிஜமான நீ நல்லுறவு தருவாயே.

நிலவுக்காக இரவா?
இரவுக்காக நிலவா?
நிலவுக்கும் இரவுக்கும்
நெருங்கிய உறவைப் போல்
நகர்ந்து வந்த நிலவே!. - உன்
நினைவுதானே எனக்கு வெளிச்சம்.
நீ தந்த வெளிச்சத்தில்தானே
நான் வாழ்ந்து வருகின்றேன்.

அழகான மொழி எதுவென்றால்
அன்பே !. நீபேசும் மொழிதான் என்பேன்.
உன்னைத்தான் அழகிய தமிழ் மகள் என்பேன்.
உள்ளத்தையே கொள்ளைக்கொண்ட
உன்னத மொழியாள் நீயல்லவோ! - இங்கு
உன்னையன்றி வேறுமொழி எதுவென்பேன்.
உணர்வறிந்துஉற்சாகமுடன்
உரைத்திடுவேன் - என்
அழகிய தமிழ் மகள் நீதான் கண்ணே!.

எழுதியவர் : ச.சந்திரமௌலி (3-Jul-16, 3:36 pm)
பார்வை : 98

மேலே